கடந்த 4 ஆண்டுகளில் 234 தொகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டட விபரங்களை அந்தந்த எம்எல்ஏக்களுக்கு தனித்தனியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடிதமாக அனுப்பியுள்ளார். அரசுப் பள்ளிகளில் இதுவரை புதியதாக கட்டப்பட்ட கட்டடங்கள், கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் கட்டப்பட உள்ள கட்டடங்களின் விபரங்களை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் எம்எல்ஏக்கள் சந்தேகம் இருந்தால் அமைச்சரை தொடர்பு கொள்ளலாம்.