அண்ணா பிறந்த நாள் விழா; முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

69பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக கட்சி சார்பில், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில், திருத்தங்கல்லில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும், சிவகாசியில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு அதிமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி