மக்கள் தொடர்பு திட்ட முகாம். மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு...

60பார்த்தது
சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன்
தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ. 2, 15, 250/- மதிப்பிலான உதவித்தொகை 255 பயனாளிகளுக்கு ரூ. 1, 01, 77, 085/- மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும், 15 பயனாளிகளுக்கு ரூ. 9, 30, 000/- மதிப்பில், சாலை விபத்து நிவாரண தொகைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ. 14, 500/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 8 பயனாளிகளுக்கு ரூ. 7, 35, 000/- மதிப்பிலான கல்தூண் பந்தல் அமைத்தல், சிப்பம் கட்டுதல் அறை, நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 322 பயனாளிகளுக்கு ரூ. 1. 21 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ. ப. ஜெயசீலன் வழங்கினார். அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி