இருக்கன்குடிமாரியம்மன் கோவில் உண்டியல்எண்ணும் பணி நடைபெற்றது

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. திருக்கோவிலுக்கு தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய காணிக்கை பொருட்களை எண்ணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றது.

11 நிரந்தர உண்டியல், 1 கோசாலை உண்டியல் உள்பட 12 உண்டியல் திறக்கப்பட்டு அதிலுள்ள காணிக்கை பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன. அதில் ரூ. 32 லட்சம் ரொக்கமும் தங்கம்- 89. 100கிராமும் மற்றும் வெள்ளி- 425. 300கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. எண்ணிக்கை என்னும் பணியில் சாத்தூர், ராஜபாளையம் , மதுரை, ஆகிய
ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். விருதுநகர் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் மற்றும் கோவில் உதவி ஆணையர் இளங்கோவன், ஆகியோர் தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி முன்னிலையில் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய காணிக்கை பொருட்களை என்னும் பணி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி