விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.