விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 26 ஆவது ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை கேப் ஜெமினி நிர்வாகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் முதன்மை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி நிர்வாக செயலாளர் ஆடிட்டர் தர்மராஜன், முதல்வர் செந்தில், தலைவர் மருத்துவர் புகழேந்தி பாண்டியன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் எம் எஸ் ஜி முருகன், பொருளாளர் எஸ் பி ஜி சி ஸ்ரீ முருகன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.