மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து சாதித்த மருத்துவர்கள்

60பார்த்தது
விருதுநகர் அருகே நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த பால்ராஜ் வயது (66) என்பவருக்கு முதல் முறையாக மூக்கின் வழியாக மூளை தண்டுவட திரவ கசிவு சரி செய்யும் அறுவை சிகிச்சை, இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தெற்குகருங்குளத்தைச் சேர்ந்த சபரி குமாரி வயது 44 என்ற பெண்ணுக்கு கர்ப்பப்பையில் இருந்த 6. 5 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். மேலும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்தும் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தெரிவித்த போது எங்களிடம் நான்கு வயது குழந்தை அனுமதிக்கப்படும்பொழுது அவருக்கு மூளையில் சீழ் பிடித்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார்.
அவருக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையான கண்காணிப்பில்
மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.
இந்த சிகிச்சை விருதுநகரில் முதல் முறையாக செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கர்ப்பப்‌ பையில் இருந்த 6. 5 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளோம்.
இந்தப் பெண் கடந்த பத்து ஆண்டு காலமாக வயிற்று வலியினால் அவதி அவதியுற்று வந்தார்.

தொடர்புடைய செய்தி