மன நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி ‘உலக மனநல தினம்’ கொண்டாடப்படுகிறது. உலகில் சுமார் 100 கோடி மக்கள் மனநலச்சிக்கல்களால் அவதியுறுகின்றனர். மனிதன் நல்ல மனநலத்துடன் இருந்தால்தான் அவன் செய்யும் செயல் திறன் பெற்றதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலமும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். எனவே மனநலன் குறித்த புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.