சாத்துார் அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி.
போலீஸ் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே 4 வழிச் சாலையில் விபத்தில் சிக்கிய இருவர் உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை.
மதுரை மாவட்டம், பாரப்பத்தியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அன்பு(எ) பால்பாண்டி(22). பாரப்பத்தியைச் சேர்ந்தவர் சூர்யா(20). இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சாத்தூர் அருகே உள்ள இருக்கண்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். பின்பு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நடுவப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, முன்னாள் சென்ற சரக்கு வாகனத்தில் இருந்து குழாய் ஒன்று சாலையில் திடீரென விழுந்துள்ளது. இதில் இரு சக்கர வாகனம் ஏறியதால் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது, பின்னால் வந்த கார் இருவர் மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அன்பு(எ) பால்பாண்டியை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பால்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.