தொடர் விடுமுறைகளை அள்ளித் தரும் ஹேப்பி ஏப்ரலாக இந்த மாதம் அமைந்துள்ளது. தமிழ் புத்தாண்டுக்கு ஏப்.12 முதல் ஏப்.14 வரை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், புனித வெள்ளி மூலம் மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது. ஏப்.18 முதல் ஏப்.20 வரை விடுமுறை கிடைக்க உள்ளது. மேலும், கோடை விடுமுறையும் வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரே குஷிதான்!