வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் அறிவிப்பு

66பார்த்தது
வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் அறிவிப்பு
FEFSI யூனியன் உடன் சுமூக தீர்வு காணும் வரை சென்னையில் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் செயல் தலைவர் மார்க்கஸ் கூறுகையில், “நாளை முதல் சென்னையில் நடைபெறும் திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரம் மற்றும் இணையத் தொடர் உள்ளிட்ட அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் தென்னிந்திய அவுட்டோர் யூனிட் செல்லாது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் நடைபெறும் படப்பிடிப்பு வழக்கம்போல் நடைபெறும்” என்றார்.

தொடர்புடைய செய்தி