இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.
பல நாட்களுக்குப் பின் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து இராஜபாளையம், தென்றல் நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, ஹசிங் போர்டு, முகவூர், தளவாய்புரம், சேத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இராஜபாளையம் பகுதியில் பல நாட்களுக்குப் பின்னர் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.