ராஜபாளையத்தில் திருமங்கலத்திலிருந்து எர்ணாகுளம் கடத்திச் செல்லப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே 15 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல். மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட வழங்கல் அதிகாரி அனிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் தலைமையிலான மூன்று வட்டார வழங்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கொண்ட குழு ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், நெல்லை சங்கர் நகரை சேர்ந்த தங்கதுரை 47, என்பவர் தனது சொந்த சரக்கு வாகனத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 டன் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக திருமங்கலத்தில் உள்ள ரைஸ் மில்லிலிருந்து எர்ணாகுளத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தங்கதுரையை கைது செய்து அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் குடிமை பொருள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.