ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்
தங்கப்பாண்டியன் தனது ஒரு மாத ஊதியம் ரூ. 1. 05 லட்சத்தை 6
மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கினாா். சேத்தூா் பேரூராட்சியைச் சாா்ந்த வித்யா, முத்துச்செல்வி, மஞ்சுளா. ஐஸ்வா்யா, சரண்யா, ல. திவ்யா ஆகிய 6 மாணவிகளுக்கு மருத்துவம், சட்டம், ஆசிரியா் பயிற்சி போன்ற மேற்படிப்புகளைத் தொடர ஏதுவாக இந்தத் தொகையை தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா்
தனுஷ் எம். குமாா், தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா். கல்வி உதவித் தொகை பெற்ற மாணவிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனா். நிகழ்ச்சியில் சேத்தூா் பேரூராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன், கட்சி நிா்வாகிகள், மானவிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.