ராஜபாளையத்தில் பீரோவை உடைத்து 70 பவுன் தங்க நகை திருட்டு

3949பார்த்தது
இராஜபாளையம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் இவர் தனியார் அலுவலகத்தில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சந்திரசேகர் வீட்டிலிருந்து தனது இளைய மகளை மதுரைக்கு அனுப்பி வைப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

சந்திரசேகரின் மனைவி பிரேமா ஆசிரியர் என்பதால் தேர்தல் பயிற்சிக்காக சென்று விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது கேட்டின் கதவு உடைக்கப்பட்டு பூட்டு காணாமல் போய் இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 70 பவுன் நகை 60 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் தெற்கு காவல் நிலையத்தில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வடக்கு ஆண்டாள்புரத்தில் இரவில் 60 பவுன் நகை திருட்டுப் போனது தற்போது பட்டப் பகலில் 70 பவுன் நகை கொள்ளை நடந்து உள்ளது இந்த சம்பவங்களால் இராஜபாளையம் பகுதி மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி