அருப்புக்கோட்டையில் புதிய ரயில் வருகைக்கு வரவேற்பு

50பார்த்தது
அருப்புக்கோட்டையில் புதிய ரயில் வருகைக்கு வரவேற்பு
காரைக்குடியில் இருந்து மைசூர் வரை அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செப்.,5) முதன்முறையாக அருப்புக்கோட்டை வழியாக மைசூரில் இருந்து செங்கோட்டை சென்ற இந்த சிறப்பு ரயிலுக்கு அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் ரயில் ஓட்டுனருக்கு, சால்வை அணிவித்தும் கடலை உருண்டை வழங்கியும் வரவேற்பு அளித்தனர். அதேபோல அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த ரயில் பயணிகளுக்கும் கடலை உருண்டை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அருப்புக்கோட்டை வழியாக வாரம் வியாழன், ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்த புறப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட ஊர்கள் வழியாக பெங்களூர், மைசூரு செல்ல உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ரயில் பயணி போர் சங்கத் தலைவர் ஆனந்தன், செயலாளர் சரவணன், ஆலோசகர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி