குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

85பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாக்கியம்(24). இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெயபாக்கியம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ‌ மேலும் ரூ 20, 000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி