ஒடிசா முதலமைச்சராக மோகன் மாஜி தேர்வு!

81பார்த்தது
ஒடிசா முதலமைச்சராக மோகன் மாஜி தேர்வு!
ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய முதல்வரை தேர்வு செய்ய மேற்பார்வையாளர்களாக பாஜகவின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பூபேந்திர யாதவ், ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஒடிசாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டார். மோகன் சரண் மாஜி ஒடிசாவில் இதற்கு முன் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி