முட்டை விலை 5 காசுகள் உயர்வு

56பார்த்தது
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் முட்டை ஒன்றின் விலை ரூ.5.45 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த முட்டையின் விலை நாளை காலை முதல் அமுலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை விலையும் அதிகரித்துள்ளது.