தமிழ்நாடு பாஜக தலைவர் எங்கே - ஜோதிமணி கேள்வி

55பார்த்தது
தமிழ்நாடு பாஜக தலைவர் எங்கே - ஜோதிமணி கேள்வி
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், மோடியின் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வாரிசுகளின் பட்டியலை தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். எனது தந்தையின் பெயர் கருணாநிதி இல்லை குப்புசாமி என்று சொன்ன தமிழ்நாடு பாஜக தலைவர் எங்கே? என்று பதிவிட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளது குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி