அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறை மூலம் மின்வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் காரணமாக பாளையம்பட்டியில் ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று ஜூன் 7 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்திரா நகர், திருக்குமரன் நகர் மற்றும் பசும்பொன் நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.