மலையரசன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

1160பார்த்தது
அருப்புக்கோட்டை மலையரசன் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு அருள்மிகு மலையரசன் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அருப்புக்கோட்டை திருநகரம் அருகே பழமையான மலையரசன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று(7. 10. 23) புரட்டாசி 3 வது சனிக்கிழமையை முன்னிட்டு மலையரசன் கோவிலில்
சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஸ்ரீ நித்தியானந்தா சுவாமி என்கிற மலையரசன் சுவாமிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயர் பெருமானுக்கும், மேலும் கோவிலுடன் உள்ள குன்றின் மீது அருள்பாலிக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமானுக்கும் ஒரே நேரத்தில் தீப, தூப ஆராதனைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. வழிபாட்டையடுத்து ஸ்ரீ கருடாழ்வார் வாகனத்தில் அருள்மிகு நித்தியானந்தா என்கிற மலையரசன் சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நின்றும் சுவாமி தரிசனம் செய்தனர் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி