அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் உள்ள தனியார் மண்டபத்தில் அருப்புக்கோட்டை நகர் மற்றும் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்,
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சுழி அருப்புக்கோட்டை சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி என்ற எழுச்சியுடன் அதிமுக தொண்டர்கள் பணியாற்றி வருகிறார்கள் என பேசினார். கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது இன்னும் 15 மாதங்கள் இருக்கிறது அண்ணா திமுக ஒரு மிகப்பெரிய இயக்கம் எங்களுடன் கூட்டணி வைக்காதவர்களே கிடையாது கூட்டணிகள் வரும் இருக்கும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகத்தை எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருகிறார். தங்களது உற்றார் உறவினர்களுக்கு பதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தலைமை முதல் தொண்டர்கள் வரை குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது.
அண்ணா காலம் தொட்டு எத்தனையோ தியாகிகள் திமுகவில் இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது திமுகவினர் கொதித்து போய் உள்ளார்கள். ‌ இந்த கொதிப்பு தேர்தல் நேரத்தில் வெளிப்படும். இது அண்ணா திமுகவிற்கு சாதகமாக அமையும். ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி