நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் முன்னாள் டீம் மேட் தன்மய் ஸ்ரீவஸ்தவா நடுவராக களமிறங்குகிறார். 2008 ஆம் ஆண்டு நடந்த U19 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் டாப் ஸ்கோரராக பிரகாசித்த இவரின் கிரிக்கெட் வாழ்க்கை, அவர் நினைத்தது போல் அமையவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் நடுவராக களமிறங்க ஆவலோடு எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.