வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.