கேரளாவை சேர்ந்த பெண் வனத்துறை அதிகாரி ரோஷினி கடந்த ஐந்து ஆண்டுகளில் 500க்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். விஷம் கொண்ட மற்றும் விஷமில்லாத பாம்புகள் இதில் அடக்கம். பாம்புகள் மட்டுமின்றி முள்ளம்பன்றிகள், மான்கள் போன்ற பிற காட்டு விலங்குகளை கண்டாலும் அவர் அஞ்சுவதில்லை. Rapid Response Team என்ற குழுவிலும் உள்ள ரோஷினி அதன் மூலமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆபத்தான பாம்புகளை பிடித்துள்ளார்.