4 நாட்கள் டாஸ்மாக் கடை மூடல்

554பார்த்தது
4 நாட்கள் டாஸ்மாக் கடை மூடல்
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடப்பதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில், வரும் ஏப். 17 ம் தேதி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12. 00 மணி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கையான தினமான வரும் ஜூன் 4 ஆகிய தினங்களில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி