விழுப்புரம்: விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் அசத்தல்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, விளையாட்டு துறை சார்பில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி விழுப்புரம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கலெக்டர் பழனி துவக்கி வைத்தார். செவித்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரை ஆண், பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஒட்டமும், நீளம் தாண்டுதலும், 15 வயது முதல் 17 வயது வரை ஆண், பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு 200 மீட்டர் ஓட்டமும், குண்டு எறிதலும், 17 வயதிற்கு மேற்பட்டோருக்கு 400 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதேபோல், 12 முதல் 14 வயது வரை பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நின்று நீளம் தாண்டுதலும், குறைவாக பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நின்று நீளம் தாண்டுதலும், குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடந்தது. அறிவுசார் குறையுடையோருக்கான 12 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு நின்று நீளம் தாண்டுதலும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு ஓடி நீளம் தாண்டுதலும், 17 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடந்தது. இப்போட்டிகளில், சிறப்பு பள்ளிகளைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.