விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் வாக்குப்பதிவு

68பார்த்தது
விக்கிரவாண்டி இடைதேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 138 வாக்கு சாவடி மையங்களில் 276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் அ. சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் 11 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் என மொத்தமாக 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாதுகாப்பு பணியில் 2651 காவல் துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் 1104 மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னியூர் மேல்நிலைப்பள்ளியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது மனைவி வனிதாவுடன் முதல் நபராக வாக்கு சாவடியில் வாக்களித்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி