தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் ஒரு கிறிஸ்துவன் எனக் கூறினால் சங்கிகளுக்கு வயிற்றெரிச்சல் வருகிறது” என கூறியிருந்தார். இதனை விமர்சித்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “உதயநிதி தன்னை கிறிஸ்துவன் என்று கூறினால் மற்றவர்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல் வரவேண்டும்?. ஒருவேளை நாளை இந்துக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டு போடமாட்டார்கள் என்ற நிலை வந்தால், நான் ஒரு இந்து எனக் கூறிக்கொள்வார் என நினைக்கிறேன்” என்றார்.