தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுநர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவிற்கு ஒப்புதல் அளித்திடுவதே அவர் வகிக்கும் பதவிக்கு அழகாகும். ஆனால் அதனை செய்யாமல் அரசால் நிறைவேற்றப்படும் மக்கள் நலன் காக்கும் பலவற்றை நிராகரித்து வருகிறார். இனியாவது ஆளுநர் தனது செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.