நீங்கள் தினமும் இரவு உணவுக்கு பின்னர் தூங்கச் செல்கிறீர்களா?. இதனால், உங்களது உடல் எடை அதிகரிக்கும். இரவு நீண்ட நேரம் கழித்து நொறுக்குத் தீனிகளை கொறிப்பது, பசியற்ற அல்லது தேவையற்ற நேரத்தில் உணவுகளை உண்பதன் மூலம் இரவில் அதிக கலோரிகளை உட்கொள்வது இவையெல்லாம் செரிமானத்தை மோசமாக்கும். அப்படி செரிமான பிரச்சனை ஏற்பட்டால் மூலிகை டீயை (Herbal Tea) அருந்துவது நன்மை தரும். குறிப்பாக, காஃபின் இல்லாத இஞ்சி டீ, மிளகுக்கீரை டீ போன்றவற்றை அருந்தலாம். இவை செரிமானத்தை எளிதாக்கி, வயிறை இலகுவாக்கும்.