விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழா நேற்று (நவம்பர் 13) மாலை 4.00 மணிக்கு தொடங்கி நடந்தது. மூலவர் பசுபதிசுவரருக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் பசுபதீஸ்வரர் மலர் அலங்காரம் செய்தும், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.