நூபர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்

60பார்த்தது
நூபர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்
மதுரை அருகே உள்ள அழகர்கோவில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் உடனுறை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மூன்றாம் நாளான நேற்று (நவ., 13) தைலக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு கள்ளழகர் பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது. மலை மேல் உள்ள நூபர கங்கையில் நீராடி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி