மது அருந்தி சிகிச்சை பெற்று வந்த 5 போ் வீடு திரும்பினா்

54பார்த்தது
மது அருந்தி சிகிச்சை பெற்று வந்த 5 போ் வீடு திரும்பினா்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வெளி மாநில மதுவை வாங்கி அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுகுறித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விக்கிரவாண்டி வட்டம், மதுரா பூரிகுடிசை கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி புதுச்சேரி சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட 7 போ் காவல் துறை நடவடிக்கையின்பேரில் மருத்துவமைனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் 5 போ் சிகிச்சை முடிந்து புதன்கிழமை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 2 பேருக்கு தொடா் மதுப்பழக்கம் இருந்து வந்ததால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், 2 பேருக்கும் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் நலமாக உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி