புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் பாரத் நிவாஸ் கலா கேந்திரா அரங்கில், இளஞ்சிவப்பு கற்களால் வடிவமைக்கப்பட்ட விஷ்ணு சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரியில் இருந்து 10 கி. மீட்டரில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பாரத் நிவாஸ் கலாகேந்திராவில் பல்வேறு கண்காட்சிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று இளஞ்சிவப்பு கற்களால் வடிவமைக்கப்பட்ட விஷ்ணு சாமி சிலை திறப்பு விழா நடந்தது.
ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி வரவேற்றார். துணை செயலாளர் ஐ. பி. எஸ். , அதிகாரி சொர்ணாம்பிகா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவா மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை பங்கேற்று, கலைநயமிக்க விஷ்ணு சிலையை திறந்து வைத்து, கலாகேந்திராவில் உள்ள கண்காட்சியை பார்வையிட்டார்.