திருப்பத்தூர்: தாதகுள்ளனூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் புறாக்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், புறா வாங்குவதாக கூறி மர்ம கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்துள்ளது. பின்னர், தனியாக இருந்த பெண்ணை செல்போன் சார்ஜர் ஒயரால் கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். தொடர்ந்து, அப்பெண் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.