நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கர்மாவின் பதில், நீங்கள் பொய் சொல்லி ஒருவரது வாழ்க்கையை அளிக்கும்போது, அது கடன் கொடுத்து வட்டியை திரும்ப பெறுவது போல உங்களுக்கே திரும்பி வரும்" என பதிவிட்டுள்ளார். அவர் மொட்டை கட்டையாக இந்த பதிவை போட்டிருந்தாலும் அது தனுஷை தாக்கி தான் போட்டிருக்கிறார் என தெரிகிறது என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு தான் தனுஷுக்கு விவாகரத்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.