திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (நவ 29) காலை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் ஏழுமலையானை வழிபட்டார். வழிபாட்டை முடித்துக்கொண்டு கோவிலுக்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரின் திடீர் கோவில் விசிட் குறித்து கேள்வி எழுப்பிய போது அடுத்த (டிசம்பர்) மாதம் தனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் தனது பெற்றோருடன் திருப்பதி வந்து சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.