வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து 300 கி.மீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும், இப்புயல் சின்னம் 8 கி.மீ. வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.