கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி - சேலம் ரவுண்டானா சாலை அருகே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 20 கோடியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அன்னதான கூடம் அமைய உள்ளது. இதற்கான பணிகளை பூமி பூஜையுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இன்று (நவ. 28) வந்திருந்தார். அவருடன் மகன் மிதுனும் வந்திருந்தார். மிதுன் தந்தையுடன் பங்கேற்கும் முதல் பொது நிகழ்வு இதுவாகும்.