மனைவி கண்டித்தால் கணவர் தற்கொலை

59பார்த்தது
மனைவி கண்டித்தால் கணவர் தற்கொலை
வானூா் வட்டம், கிளாப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன் கிருஷ்ணமூா்த்தி (46). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதை இவரின் மனைவி ஜெகதீஸ்வரி (33) கண்டித்ததால், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூா்த்தி கடந்த 6-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. தொடா்ந்து, புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கிருஷ்ணமூா்த்தி, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி