மகாராஷ்டிராவின் மஹாயுதி கூட்டணி டிசம்பர் 5ஆம் தேதி புதிய அரசாங்கத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கு வழங்கப்படும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ஏக்நாத் ஷிண்டே, ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் இடையே அதிகாரப் பகிர்வு ஏற்பாடு குறித்து ஆலோசிக்க பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நாளை (டிச., 02) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.