புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் இன்று (டிச., 01) ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், கனமழை நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 46 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.