ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று (நவ.30) இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள்ளாக கரையை கடந்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் 47 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் 50 செ.மீ., மழையும் கடலூரில் 18 செ.மீ,, மழையும் பெய்துள்ளது. மேலும், மரக்காணத்தில் 23.8 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.