திருக்கோவிலூரில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்

2958பார்த்தது
திருக்கோவிலூரில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்
திருக்கோவிலுார், பம்ப்ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மதன்மோகன் மற்றும் போலீசார் நேற்று மாலை அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மணலுார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மகன் ஹரி, 21; பிடித்து விசாரித்ததில், அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்தது தெரிய வந்தது.

இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஹரியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி