திருச்சியில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை

56பார்த்தது
திருச்சியில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான எம்ஐடி கல்வி நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள பாலிடெக்னிக், வேளாண் பொறியியல் கல்லூரிகளில் சோதனை நடத்தப்படுகிறது. இளங்கோவன் மாநில கூட்டுறவு சங்க தலைவராக இருந்துள்ளார். தற்போது சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.

தொடர்புடைய செய்தி