விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் இறப்பு

51பார்த்தது
விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் இறப்பு
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் கபிலன்(எ) கண்ணன், 21; புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பகல் 2: 00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் - அரசூர் சாலை வழியாக பஜாஜ் பல்சர் பைக்கில் பாட்டி வீட்டிற்கு சென்ற கொண்டிருந்தார். திருமுண்டீச்சரம் கிராமம் அருகே சென்ற போது, எதிரே வந்த கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் மாணவர் கணணன் சம்பவ இடத்திலேயே பலியானார். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி