பிரபாகரன், வீரப்பன், தமிழ்தேசியம் முற்போக்கு அல்ல - கார்த்தி சிதம்பரம்

65பார்த்தது
பிரபாகரன், வீரப்பன், தமிழ்தேசியம் முற்போக்கு அல்ல - கார்த்தி சிதம்பரம்
பிரபாகரன், வீரப்பன், தமிழ்தேசியம் என்பது முற்போக்கான சிந்தனை அல்ல என சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி மாநில கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்ததற்காக ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். இது "கோபமடைந்த இளைஞனின்" இடைக்கால வாக்கு. பிரபாகரன், வீரப்பன், தமிழ்தேசியம் என்பது முற்போக்கான சிந்தனை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான வாக்காளர்கள் ஒரு தேர்தலுக்குப் பிறகு மாற்றம் கொள்வார்கள். ஒரு தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட அனைத்து நிர்வாகிகளும் கட்சியை கைவிடுவார்கள். இது உறுதியான எதையும் வழங்காது என கூறியுள்ளார்.

இதனை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள நாதக கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், சிவகங்கை தொகுதியில் 1,65,000 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்ததானே செய்யும். தலைவர் பிரபாகரன் எங்கள் இனக்காவலன், சீயான் வீரப்பனார் எங்கள் வனக்காவலன், தமிழ்த்தேசியம் எங்கள் அடையாளம் என பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி