ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு

56பார்த்தது
ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதலமைச்சராக நாளை (ஜுன் 12) சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த அம்மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களைப் பிடித்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது. கூட்டணிக் கட்சிகளான ஜனசேனா 21, பாஜக 8 தொகுதிகள் மொத்தம் 164 இடங்களை கைப்பற்றியுள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஆட்சியையும் தெலுங்கு தேசம் கட்சியிடம் பறிகொடுத்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

தொடர்புடைய செய்தி